ஐ.நா-வில் கஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க சீனா கோரிக்கை: எதிர்ப்பு தெரிவித்த உறுப்பு நாடுகள்

0

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு கஷ்மீரின் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதோடு, அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய பாஜக அரசு பிரித்தது.

கடந்த மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க சீனா கோரிக்கை விடுத்தது. ஆனால், பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நேற்று நடைபெற்ற ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில், கஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க கோரிக்கை விடுத்தது.

ஆனால் கடந்த முறை போல் தற்போதும் கவுன்சிலில் உள்ள மற்ற உறுப்பு நாடுகள் சீனாவின் கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. கஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க இது இடம் இல்லை என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்து விட்டது.

Comments are closed.