பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது பாலியல் குற்றஞ்சாட்டிய மாணவி மாயம்!

0

பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது பாலியல் குற்றம்சாட்டி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளிட்ட மாணவி மாயமானதால் சின்மயானந்த் மீது வழக்குப் பதிவு செய்யதுள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியின் தலைவராக சின்மயானந்த் இருந்து வருகிறார். இவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தவர். இவரின் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் 23 வயது மாணவி ஒருவர் கடந்த வாரம் சின்மயானந்த் மீது பாலியல் குற்றஞ்சாட்டை வைத்து, வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளிட்டார்.

இந்த வீடியோவில், “கல்லூரியின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் பெண்களை தவறாக பயன்படுத்தி வருகிறார். நடந்த உண்மையை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.

அவருக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்க முடியாது என மிரட்டுகிறார். இந்த பிரச்சனையில் பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் உதவி செய்ய வேண்டும். எனக்கும் என் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் வருகின்றன. எனக்கு நீதி வேண்டும்” என அந்த மாணவி கூறியிருந்தார்.

இதனையடுத்து அந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் சின்மயானந்த் மீது புகார் அளித்துருந்தார்.

தற்போது மாணவி காணவில்லை என்ற புகாரை அடுத்து சுமார் மூன்று நாட்கள் கழித்து போலிஸார் புகாரை ஏற்றுக் கொண்டு, சின்மயானந்த் மீது வழக்குப் பதிவு செய்யதுள்ளனர்.

Comments are closed.