அமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்

0

அமெரிக்காவில் சக இந்தியரை சாதியைக குறிப்பிட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக சிஸ்கோ நிறுவன அதிகாரிகள் இரண்டு பேர் மீது புகார் எழுந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த ஒருவர், கடந்த 2015 முதல் கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள சிஸ்கோ நிறுவன தலைமையகத்தில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதே சிஸ்கோ நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் சுந்தர் ஐயர் மற்றும் ரமணா கொம்பெல்லா ஆகிய இருவரும், பட்டியல் வகுப்பை சேர்ந்த பொறியாளரை, சாதி ரீதியில் துன்புறுத்தி வந்துள்ளனர். சிஸ்கோ நிறுவனத்தின் சிலிக்கான் வேலி தலைமையகத்தில் பணிபுரிந்ததிலிருந்தே இதுபோன்ற துன்புறுத்தல் நடந்து வருகிறது.

ஊதிய குறைப்பு, வாய்ப்புக்கள் மறுப்பு ஆகிய பாகுபாட்டை அரங்கேற்றிவந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சுந்தர் ஐயர், பதவி விலகிய நிலையில், ரமணா கொம்பெல்லா துன்புறுத்தலை தொடர்ந்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பட்டியல் வகுப்பை சேர்ந்தவர், சான்-ஜோஸில் உள்ள காவல்நிலையத்தில் அமெரிக்க சட்டப்படி பாகுபாடு இல்லாத சூழலை உருவாக்க தவறியதற்காக ‘சிஸ்கோ’ நிறுவனம் மீது தற்போது வழக்குத் தொடுத்துள்ளார்.

Comments are closed.