CISF வீரரை தாக்கிய பாஜக பிரமுகருக்கு ஒரு வருட சிறை

0

விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த CISF வீரரை தாக்கிய பாஜக பிரமுகருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து ஆலந்தூர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

வாதத்தரப்பின் கூற்றுப்படி, CISF இல் துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் பிரேந்தர் சிங், கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி விமான நிலைய முக்கிய வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது புது டில்லியில் இருந்து வருகை புரிந்த பாஜக வின் ராஜ்நாத் சிங்கை வரவேற்க G.ஜெயக்குமார் உட்பட 12 நபர்கள் விமான நிலையம் வந்துள்ளனர்.

இவர்களிடம் துணை ஆய்வாளர் பிரேந்தர் சிங் நுழைவு சீட்டை காண்பிக்குமாறு கேட்ட அவர்கள் துணை ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுளளனர். அப்போது CISF துணை ஆய்வாளரை மிரட்டி தாக்கிவிட்டு ஜெயகுமார் விமான நிலையத்திற்குள் சென்றுள்ளார்.

இவரின் இந்த செயல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.