“குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கானது அல்ல”- தயாநிதி மாறன்!

0

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவாதத்தில் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பேசினார்.

அப்போது, “இந்த மசோதா ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கானதல்ல. கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் “இந்த மசோதாவில் கிறிஸ்தவர்களை சேர்த்துள்ளது வியப்பாக உள்ளது. அவர்கள் மீது திடீர் அன்பு ஏன் கிறிஸ்தவர்களை சேர்த்தது மகிழ்ச்சிதான். ஆனாலும் மேற்கத்திய நாடுகளுக்கு பயந்து கிறிஸ்தவர்களை சேர்த்துள்ளீர்கள் என்று தெரிகிறது.

உங்கள் சிந்தனை எல்லாம் முஸ்லிம்களை வெறுப்பதில்தான் உள்ளது. நாட்டில் 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் நீங்கள் ஆட்சி வந்தநாள் முதல் அச்சப்பட்டு வாழ்கிறார்கள். பசு கடத்தல் என கூறி அவர்கள் மீது வழக்கு தொடுப்பது, கும்பல் படுகொலை போன்ற வன்முறை நடக்கிறது.

எனவே இந்த குடியுரிமை சட்ட்த்திருத்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

Comments are closed.