பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை

0

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் திலீப் ராய்-க்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அன்றைய காலத்தில் பிரதமராக இருந்த வாஜ்பாய் அமைச்சரவையில் நிலக்கரித்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் திலீப் ராய். இவரது பதவிக் காலத்தில் 1999இல் ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி பகுதியில் நிலக்கரிச் சுரங்கத்தை CTL என்ற நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்த நிலையில் வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.

இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் திலீப் ராய் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 409 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கவும், CTL நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம் விதிக்கவும் வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்ட நிலையில், திலீப் ராய்க்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திலீப் ராயுடன் மேலும் இருவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.