நியூசிலாந்து தாக்குதலை கொண்டாடிய ஊழியர்! பணிநீக்கம் செய்த நிறுவனம்!

0

நியூசிலாந்து தாக்குதலை கொண்டாடிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளது துபாய் நிறுவனம்.

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் தொழுகை நடைபெற்றபோது, ஒரு தீவிரவாதி திடீரென மசூதிக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினான்.

இதில் 49 பேர் பலியாகினர். இந்த மனித தன்மையற்ற செயலுக்கு பல்வேறு நாட்டினரும், கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்த ஊழியர் ஒருவர், தனது முகநூல் பக்கத்தில், நியூசிலாந்தில் மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கொண்டாடும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

பின்னர் இதை அறிந்த அந்த நிறுவனத்தின் தலைவர், அவரை பணியில் இருந்து நீக்கினார். மேலும் அந்த ஊழியர் துபாயை விட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.