கர்நாடகாவில் வாடகை படுக்கைக்கு ரூ.280 கோடி: மக்கள் பணத்தை சூறையடிக்கும் பாஜக அரசு

0

கொரோனா தொற்று பராமரிப்பு மையங்களுக்கு 30 ஆயிரம் படுக்கைகளை வாடகைக்கு எடுத்த வகையில் மட்டும் ரூ. 280 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக, கர்நாடக பாஜக அரசு கணக்கு தெரிவித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

30 ஆயிரம் படுக்கைகளை உற்பத்தி செய்வதற்கு ஆகும் மொத்த செலவு ரூ. 21 கோடியாக இருக்கும்போது, கர்நாடக பாஜக அரசு வாடகை என்ற பெயரில் மக்களின் பணம் ரூ. 280 கோடியை சூறையாடியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜக அரசின் இந்த திருட்டுத்தனத்திற்கு பல்வேறு தரப்பிரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னணியில் ஊழல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆனால் தனக்கு ஒன்றுமே தெரியாததுபோல பழியைத்தூக்கி அதிகாரிகள் மீது போடும் முயற்சியில் முதல்வர் எடியூரப்பா இறங்கியுள்ளார்.

Comments are closed.