கொரோனா அச்சம்: ஊர் திரும்பிய பணியாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் -ராகுல் காந்தி

0

ஊரடங்கு திடீரென அமல்படுத்தப்பட்டதால் மக்களிடையே குழப்பமும் பீதியும் ஏற்பட்டுள்ளதாக ராகுல் காந்தி, மோடிக்கு கடிதம் எழுதியுள்ளர்

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

கொரோனா நோயை கட்டுக்குள்கொண்டுவர, பல்வேறு நாட்டு தலைவர்கள் அவர்களது நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்துள்ளனர். அதில் இந்தியாவும் ஒன்று.

நாட்டிலுள்ள ஏழை மக்கள் மற்றும் சில நடுத்தர மக்கள் தினசரி வருமானத்தையே நம்பியுள்ளனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு நிலவி வருவதால், அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளது. இதனால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனனர்.

ஊரடங்கால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், சிறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாலும், ஆயிரக்கணக்கான புலம்பெயர், தொழிலாளார்கள் தங்களது சொந்த மாநிலங்களை நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு உரிய இருப்பிடம், அடிப்படை சேவைகளை வழங்குவதுடன், அடுத்த சில மாதங்களுக்கு தேவையான பணத்தையும் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். வேலை இழந்த பல இளைஞர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவதால், அவர்களது பெற்றோருக்கும், அந்த ஊர்களில் வசிப்போருக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

நாட்டின் உண்மை நிலவரங்களை புரிந்துகொண்டு, அதற்கான அணுகுமுறையை மத்திய அரசு கையாள வேண்டும் என்று கடிதத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Comments are closed.