கொரோனா பரிசோதனை: ஏழைகள் யார் என்பதை அரசு முடிவு செய்யும் – உச்சநீதிமன்றம்

0

கொரோனா வைரஸ் நோய்க்கு பரிசோதனை செய்யும் அனைவருக்கு இலவச பரிசோதனை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து சோதனை செய்வதற்கு தற்போது வரை 157 அரசு ஆய்வகங்களில் சோதனை செய்யப்படுகிறது. அதே போல 67 தனியார் ஆய்வகங்களுக்கு கொரோனா சோதனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் சோதனைக்கான கட்டணம் ₹4,500 ரூபாயை என மத்திய அரசு நியமித்தது. ஆனால், தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனையை இலவசமாக செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
“அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும் என்று கூறியிருந்தோம். அந்த உத்தரவில் தற்போது சில மாற்றங்களை செய்துள்ளோம். ஏழைகளுக்கு சோதனை இலவசமாக செய்யப்பட வேண்டும். அவர்கள் யார் என்பதை அரசு முடிவு செய்து கொள்ளலாம். இதுதொடர்பாக அரசு இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் விசாரணைக்கு வந்த இவ்வழக்கு, கொரோனா பரிசோதனை என்பது மனிதநேய அடிப்படையிலானது. அனைவருக்கும் அதனை இலவசமாக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவில் கொரோனா பரிசோதனையை செய்துகொள்ள தனியார் ஆய்வகங்களில் ஒருவருக்கு ₹4,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.