தப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை

0

டெல்லி குற்றப்பிரிவு போலிஸ் தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மௌலானா சஅத் காந்தலவி அவர்கள் கொரானா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியார் பரிசோதனை நிலையம் ஒன்றில் மௌலானா அவர்களுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும், பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரானா தொற்று இல்லை என்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


டெல்லி நிஜாமுதீன் மர்கஸில் வழிபாடு கூட்டம் நடத்தியதற்காக மார்ச்31 அன்று டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை மௌலானா சஅத் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிந்து இருந்தது. கூடுதலாக அமலாக்கதுறை அவர் மீது நிதி முறைகேடு வழக்கு தொடர்ந்தது. அவர் தலைமுறைவாக இருக்கிறார் என குற்றச்சாட்டப்பட்டு இருந்த நிலையில் அவரின் வழக்கறிஞர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

“காவல்துறையின் விசாரணைக்கு ஆரம்பத்திலிருந்து முழு ஒத்துழைப்பு தருகிறோம். மௌலானா சஅத் தலைமறைவாக இல்லை, அவர் எங்கு இருக்கிறார் என்பது காவல்துறைக்கு தெரியும்.” என்பதாக வழக்கறிஞர் ஃபுசைல் அஹமத் அய்யூபி தெரிவித்தார்.

இது குறித்து மற்றொரு வழக்கறிஞர் கூறும்போது ‘ எந்த குற்றமும் செய்யாத அவர் ஏன் தலைமறைவு ஆக வேண்டும், அவர் இந்தியாவில் தான் இருக்கின்றார். இதற்கு முன்னர் வந்த நோட்டீஸ்களுக்கு ஏப்ரல் 16அன்றே பதிலளிக்கப்பட்டுவிட்டது, தனித்திருக்கும் காலம் முடிந்தவுடன் கூடுதல் தகவல்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இந்தியா டுடே மீடியாவிற்கு பேட்டியளித்திருந்த மௌலானா சாத் நாட்டின் நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், உண்மை வெல்லும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.