இதயமில்லாத பாஜக அரசு மக்களுக்கு ஒன்றுமே செய்யாது -ப.சிதம்பரம்

0

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ஏழைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் ட்விட்டரில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்ட கருத்தில், “ஏழை மக்கள் பணத்தை இழந்துவிட்டார்கள். உணவுக்கு வழியில்லாமல் இலவசமாக கிடைக்கும் உணவுகளை வாங்குவதற்காக வரிசையில் நிற்பதை காண முடிகிறது.

இதுபோன்ற ஏராளமான சான்றுகள் உள்ளன. இந்த இதயமில்லாத பாஜக அரசு மக்களுக்கு ஒன்றும் செய்யாது. ஒவ்வொரு ஏழை குடும்பற்றிற்கும் பணத்தை வழங்கி அவர்களை பசியிலிருந்து அரசால் பாதுகாக்க முடியாதா?

இந்திய உணவுக் கழகத்தில் 77 மில்லியன் டன் உணவு தானியங்கள் இருப்பு இருக்கிறதே? அதில் ஒரு சிறிய பகுதியை ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக அரசாங்கத்தால் ஏன் வழங்க முடியாது?

நான் எழுப்பிய இந்த இரு கேள்விகளும் பொருளாதாரம் சார்ந்த கேள்விகள். இந்த கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க தவறிவிட்டது”. இவ்வாறு பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.