கொரோனா பாதிப்பு: ஈஷா யோகா மையத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் -சுகாதாரத்துறை கண்காணிப்பு

0

இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 15 வரை இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது. அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இஸ்லாமியர்களும் கலந்துகொண்டனர். மேலும் மலேசியா, இந்தோனேஷியா என வெளிநாட்டினரும் பங்கேற்றனர்.

இதனால் பலருக்கு கொரோனா நோய் ஏற்பட்டிருக்க வாயப்பிருக்கலாம் என கருதி, சுகாதாரத்துறை, மாநாட்டில் கலந்துக்கொண்டவர்களை பரிசோதித்துக்கொள்ளுமாறு எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், கோவை ஈஷா யோகாவின் ஜக்கி வாசுதேவ் நடத்திய சிவராத்திரி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் பங்கேற்றிருக்கின்றனர். அதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்பிருக்கும் என்று சுகாதாரத்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

பிப்ரவரி 15ஆம் தேதியில் இருந்து தமிழகம் வந்த வெளிநாட்டினரையும், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களையும் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜக்கி வாசுதேவ் நடத்திய நிகழ்ச்சியுல் பலர் சிக்கிக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.