கொரோனா பாதிப்பிலும் அரசியல் காரணத்திற்காக நாடாளுமன்றத்தை இயக்கும் மோடி

0

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த நோய் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் 5 பேர் பலியாகியும் உள்ளனர்.

இந்நிலையில் வியாழகிழமை நேற்று மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் தங்களுக்கு தாங்களே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துக்கொள்ள வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது. முடிந்தவரை மக்கள் வீட்டில் இருந்து வேலை செய்யமாறு மோடி கேட்டுக்கொண்டார்.

மேலும். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக தூரத்தை கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், மோடி அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை மட்டும் செயல்பட அனுமதித்து வருகிறார் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.

Comments are closed.