PM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்

0

COVID-19 நிவாரணத்திற்காக அமைக்கப்பட்ட PM CARES FUND-இன் வெளிப்படைத்தன்மை குறித்து எழுந்த கேள்விகளுக்கு மத்தியில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொது அதிகாரம் என்ற வரம்பிற்குள் PM CARES FUND வரவில்லை என்று தணிக்கை குழு தெரிவித்தது.

இதுகுறித்து, வழக்கறிஞர் அபய் குப்தா PM Cares Fund குறித்தான விவரங்களை கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் இன்று வரை PM Cares Fund நிதி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த தொகை, கடந்த இரண்டு மாதங்களில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த தொகைகள் உட்பட பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து இன்றுவரை செலவிடப்பட்ட தொகை விவரங்கள், இன்றுவரை அதிக தொகையை டெபாசிட் செய்த நபரின் விவரங்கள் ஆகிய கேள்விகளை முன்வைத்தார்.

இதற்கான பதிலில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிரதமர் கேர்ஸ் நிதி ஒரு பொது அதிகாரம் அல்ல என்று குப்தாவுக்கு RTI தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஆர்டிஐ சட்டம், 2005 இன் பிரிவு 2 (எச்) இன் கீழ் PM CARES நிதி ஒரு பொது நிர்வாகம் அல்ல. PM CARES நிதி பற்றிய சில தகவல்களை PM Cares Fund இணையதளத்தில் காணலாம் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதே போல, PM Cares Fundக்கான முறையான ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? இருந்தால் அவற்றின் டிஜிட்டல் காப்பியை பொது வெளிக்கு அளிக்க வேண்டும் என்று ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கும் மேற்கண்ட ஒரே பதில்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, PM Cares Fund ஒன்றும் பொது அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என பதிலளிக்கப்பட்டுள்ளது.

PM Cares Fund இன் வெளிப்படைத்தன்மை மீது ஏராளமான சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டு வந்த நிலையில், இது பொது நிர்வாகம் அல்ல என்று உறுதி செய்யும் விதமாக RTI-இன் பதில்கள் அமைந்துள்ளது.

Comments are closed.