இந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்

0

ஊரடங்கு மேலும் தொடர்ந்தால் இந்தியாவில் வறுமை அதிகரிக்கும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் எச்சரித்துள்ளார்.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றானது 2 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை மட்டும் ஏற்படுத்திவிடவில்லை. உயிரிழப்புகளோடு சேர்த்து பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவலை தடுக்க மே 3 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த குறித்து “கொரோனாவுக்கு பிந்தைய உலகத்திற்கான பாடங்கள்” என்கிற இணைய வழி கூட்டத்தில் பேசிய சுப்பாராவ், “இந்தியாவில் பொருளாதார திருப்புமுனை வேகமாக இருக்கும் என்றும், பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சியானது எதிர்மறையாக செல்லும் அல்லது வளர்ச்சி சுருங்கிவிடும் என கருதுகிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே நம்முடைய வளர்ச்சி சரிந்துவிட்டது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஐந்து சதவிகிதமாக இருந்த கடந்த ஆண்டின் வளர்ச்சியானது தற்போது முற்றிலுமாக நின்றுவிட்டது. இந்த ஆண்டு நாம் எதிர்மறை அல்லது பூஜ்ஜியம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கப்போகிறோம்” என சுப்பாராவ் கூறியுள்ளார்.

இந்த நெருக்கடிக்குப் பிறகு நம்முடைய செயல்பாடு சிறப்பானதாக இருந்தாலும் அது பலனளிக்காது. தற்போது நடைமுறையில் இருக்கும் முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்பட்டால் தேசத்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் வாழ்வின் விளிம்புகளுக்கு தள்ளப்படுவார்கள்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி எதிர்மறையாக நழுவக்கூடும் என்றும் சுப்பாராவ் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.