“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி

0

கொரோனா தொற்று குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று காணொளி காட்சி மூலம் உரை நிகழ்த்தினார். 

அப்போது, நாட்டில் தவறான எண்ணங்களுடன் வகுப்புவாத வைரஸை பாஜக பரப்பி வருகிறது. பாரபட்சமாக மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்கிறது. பாஜகவின் இந்த செயல் நாட்டின் ஒவ்வொரு இந்தியரையும் கலக்கமடைய செய்துள்ளது.

நாம் அனைவரும் இணைந்து கொரோனா வைரஸை எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கும்போது, பாஜக தவறான வகுப்புவாத வைரஸ்களை பரப்பி, வெறுப்பை வளர்த்து வருகிறது. நமது சமூக நல்லிணக்கத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நேரத்தில் முழு மனதுடன் செயல்பட வேண்டும். ஆனால், மத்திய அரசிடம் இது இல்லை. அனைத்து வகையிலும் கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்று நான் பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

ஊரடங்கு காரணமாக விவசாயிகள், தினக்கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வர்த்தகம், தொழில்துறை பெரிய அளவில் பாதிப்பை கண்டுள்ளன.

மே 3ஆம் தேதிக்குப் பின்னர் என்ன செய்ய இருக்கிறார்கள் என்பது குறித்து எந்தவித தெளிவான வரைமுறையும் மத்திய அரசிடம் இல்லை. 

இன்னும் பாதுகாப்பு சாதனங்கள், டெஸ்ட் கிட்கள் நாட்டில் பற்றாக்குறையாக இருக்கின்றன. உணவு பொருட்கள் இன்னும் 11 கோடி மக்களை சென்றடையவில்லை. ஒவ்வோரு மாதமும், 11 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, அரை கிலோ சர்க்கரை ஆகியவை வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு வழங்க வேண்டும்.

பாஜகவின் அறிவிக்கப்படாத ஊரடங்கால் 12 கோடி பேர் தங்களது வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இவர்களது குடும்பத்திற்கு மாதம் ரூ. 7,500 கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.