தப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்

0

தப்லிக் ஜமாத்தினர் அனைவருமே கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று டெல்லி சிறுபான்மை கமிஷன் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான் தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான் இரண்டு தினங்களுக்கு முன்னர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

“டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் அப்பாவிகள். இந்த பூமியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிறரை போன்றவர்கள்தான். திட்டமிட்டபடியே மாநாட்டை நடத்தியும் உள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பை நரேந்திர மோடி வெளியிட்ட பின்னரும் கூட நாட்டின் பல பகுதிகளில் அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் சாதரணமாகவே இருந்தனர். தப்லீக் ஜமாத் மார்க்கஸில் இருந்தவர்களை தனிமைப்படுத்தியது, அவர்களை தேடி பரிசோதனைக்கு உட்படுத்தியது அனைத்தும் சரியான நடவடிக்கை ஆகும்.

ஆனால் இதை அரசு அதிகாரிகள் வெளிப்படுத்திய விதமும் ஊடகங்கள் ஒளிபரப்பிய முறையும்தான் கவலைக்குரியது. இதனால் இந்த தேசத்தில் ஒவ்வொரு தப்லிக் நபருமே சந்தேகத்துக்குரிய நபராகவும் வேட்டையாடப்படக் கூடிய நபராகவும் மாறும் நிலை ஏற்பட்டது. இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தப்லீக் உறுப்பினருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.

உள்ளூர் மக்களின் சித்திரவதைகளால் அவர் மன உளைச்சலுக்குள்ளாகி விட்டார். போபாலில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் பங்கேற்றதற்காக டெல்லியில் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கிறார்.

இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 25ம் தேதி முதல் ஒரு பகுதி மக்கள் பள்ளிக்கூடம் ஒன்றில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆகையால் தப்லீக் உறுப்பினர்களை சித்திரவதை செய்ய வேண்டாம் என காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.