தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணம்பெற்று வீடு திரும்பி வரும் தப்லீக் ஜமாத்தினர்

0

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 178 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். அதில் பெரும்பாலானோர் தப்லீக் ஜமாத்தினர் என்பது தெரியவந்துள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 20 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். அங்கு கொரோனா பாதிப்பினால் அனுமதிக்கப்பட்ட 124 நபர்களில் 71 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு நேற்று வீடு திரும்பினர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்ட ஆட்சியர் திரு.கோவிந்த ராவ், அனைவருக்கும் குண்மடைந்ததற்கான சான்றிதழை வழங்கினார்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து 39 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 27 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துமனையில் கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 32 பேர் நேற்று வீடு திரும்பினர். வீடு திரும்பிய் அனைவரும் மேலும் இரு வாரங்களுக்கு தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று வீடு திரும்பிய பெரும்பாலானோர் டெல்லி நிஜாமுத்தின் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸை பரப்புவது முஸ்லிகள்தான் என பாஜக மற்றும் அதன் சங்பரிவார்கள் மத பிரச்சாரங்கள் செய்து வருகிறது. அதற்கு உறுதுணையாக சில விஷம செய்தி தொலைக்காட்சிகள் சேவையாற்றி வருகின்றன.

தப்லீக் ஜமாத்தினருக்கு கொரோனா உறுதி என தெரிந்தவுடன் செய்திகளின் ‘முஸ்லீம்கள் தான் காரணம்’ என்ற செய்திகளும் வெளியாகியது. ஆனால் நேற்று கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்றுவந்தவர்கள், பாதிப்பின்றி மருத்துவ சான்றிதழ்களோடு வீடு திரும்பியதை, சில விஷம செய்திகள் வெளியிட மறுக்கிறது.

Comments are closed.