தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 20 வெளிநாட்டினர் விடுதலை

0

கொரோனா நோய் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 23 தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்துத்துவ மதவாதிகளின் பொய் குற்றாச்சட்டால் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துக்கொண்ட பல இஸ்லாமியர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

தப்லீக் ஜமாத்தினர் குற்றவாளிகள் போன்று அரசு அதிகாரிகளும் ஊடகங்களும் சித்தரித்தன. இதனால் நாட்டில் ஒவ்வொரு தப்லிக் நபருமே சந்தேகத்திற்குள்ளாகினர்.

டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னதாகவே தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெளிநாட்டினா் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் மும்பை காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஆா்.ஆா்.கான் திங்கள்கிழமை வெளியிட்ட தீா்ப்பில் கூறியிருப்பதாவது:

குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் எந்தவொரு சட்ட மீறலிலும் ஈடுபட்டதாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களை சமா்ப்பிக்க அரசு தவறி விட்டது. குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீது சூழ்நிலையின் சான்றுகளின் அடிப்படையில் புகாா் தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது. மேலும பொது முடக்கம் தொடா்பாக மாநகர காவல் ஆணையரின் எந்த உத்தரவையும், விதிமுறைகளையும் குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீறவில்லை என்று சாட்சிகள் தெளிவாக உள்ளன.

அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்தவொரு சட்ட ஆதாரமோ, சாட்சிகளின் அறிக்கைகளோ பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 நபரையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

Comments are closed.