தனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்

0

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவரான ஜம்மு கஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஜாஹித் அப்துல் மஜீத். கடந்த வெள்ளி அன்று ரமலான் நோன்பு நோற்றிருந்த இவர், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நோயாளியை ஆம்புலன்சிலிருந்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்ற வேண்டிய கட்டாயம்.

உடனே அங்கிருந்து நகர்ந்த மருத்துவர் ஜாஹித், நோயாளி இருந்த ஆம்புலன்சிற்கு சென்றார். அங்கு நோயாளிக்கு சரியாக வெண்டிலேட்டர் பொறுத்தாததால் மூச்சுத்திணறிக் கொண்டு இருந்தது.

அப்போது மருத்துவர் ஜாஹித், கொரோனா நோயாளிகளை கவனிப்பதற்காக மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்தார். ஆனால் அவர் அணிந்திருந்த முகக்கவசம் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுத்தியது. உடனே மருத்துவர் ஜாஹித் தன் பாதுகாப்பு குறித்து கவலையின்றி தனது முகக்கவசத்தை நீக்கிவிட்டு நோயாளிக்கு சிகிச்சை அளித்தார். இதனால் டாக்டர் ஜாஹிதுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளபோதும் அதுகுறித்து கவலையின்றி, நோயாளியின் உயிர் மிக முக்கியம் என்பதை ஜாஹித் அப்போது உண்ர்த்தினார்.

டாக்டர் ஜாஹிதின் செயலால் கொரொனா நோயாளி இறுதி கட்டத்திலிருந்து காப்பாற்றப்பட்டார். தற்போது டாக்டர் ஜாஹித் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

Comments are closed.