அரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை

0

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்தன.

இதில் பல இந்துத்துவ சங்பரிவார்கள், இஸ்லாமிய நாடுகளிலேயே இருந்துகொண்டு இஸ்லாமியர்கள் மீது பொய் பழி சுமத்தி வாழ்வாதரத்தை நடத்திவருகின்றனர். இதற்கு முடிவுகட்டும் விதமாக டிவிட்டரில் அரபு நாடுகளின் அரசு குடும்பத்தை சேர்ந்த பலர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வந்த சங்பரிவார்களின் கருத்துக்கு டிவிட்டர் மூலமே பதிலடி கொடுத்தனர். மேலும் அந்த இந்துத்துவ சங்பரிவார்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், அரபு நாடுகளின் விமர்சனங்களை மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, வளைகுடா நாடுகள் இந்தியாவுடனான உள்விவகாரங்களில் எவ்வித தலையீட்டையும் ஆதரிக்கவில்லை. தற்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் ட்விட்டுகள் இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கிடையேயான உறவினை பாதித்துவிடாது.

சமூக ஊடகங்களின் கருத்துப் பரிமாற்றங்கள் நம்பகத்தன்மையற்றவை. இது அரபு நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என விமர்சிக்கப்பட்டதினால், அரபு நாடுகளின் முக்கிய தலைவர்களும் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனத்தினை பதிவு செய்திருந்தனர்.

57 நாடுகளின் கூட்டமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation) இந்தியாவை “இஸ்லாமோபோபியா” என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.