மலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை

0

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருந்துவரும் நிலையில் கைதட்டுதல், விளக்கு ஏற்றுதல் போன்ற திட்டங்களை அடுத்து மேலும் ஒரு திட்டத்தை மோடி இரண்டு நாட்களுக்கு முன் அறங்கேற்றியுள்ளார். விமானங்கள், ஹெலிகாப்டர்களை பறக்கவிட்டு அதிலிருந்து, கொரோனா மருத்துவமனைகள் மீது மலர்களை தூவவிட செய்துள்ளார்.

இந்நிலையில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய மருத்துவர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களுக்‍கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தாங்கள் தங்கவைக்‍கப்பட்டுள்ள இடம், சுகாதாரமற்று இருப்பதாகவும், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

வானிலிருந்து பூக்‍கள் தூவுவதை நிறுத்திவிட்டு, கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களுக்‍கு நல்ல உணவு கொடுங்கள் என ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் பணியாளர்களும் மத்திய பாஜக அரசுக்‍கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.