‘மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும்’ -ராகுல் காந்தி

0

நரேந்திர மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் மத்திய பாஜக அரசின் நடவடிக்கை சரியாக அமையவில்லை. ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரத்தை பாஜக அரசு கேள்விக்குறியாக்கி விட்டது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் கொரோனா பாதிப்பு இந்த வாரத்தில் 50 லட்சத்தை எட்டிவிடும். திட்டமிடப்படாத பொதுமுடக்த்தின் விளைவாகும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக மோடி மயிலுக்கு உணவளிப்பதை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டது பல விமர்சனங்களுக்கு உள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.