ஒடிசாவில் ஊரடங்கை மீறி பூஜை நடத்திய பாஜக எம்.பி

0

ஒடிசா மாநிலத்தில், பாஜக பெண் எம்.பி. தொடர்ந்து தனிமனித இடைவெளியை மீறிவரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலம் முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஒடிசாவில் பாஜகவை சேர்ந்த பெண் எம்.பி. அபராஜிதா சாரங்கி, கொரோனா தொற்று காலத்தில் தனிமனித இடைவெளியை தொடர்ந்து மீறி வந்துள்ளார்.

ஜூன் 4 அன்று, ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் தனிமனித இடைவெளிவிதிகளை மீறினார் என அபராஜிதா மீது புகார் எழுந்தது. அவருக்கு, அவரது தரப்பினரே கண்டனம் தெரிவித்தனர். பின்னர் ஊரடங்கை மீறியதற்காக அபராஜிதா, அபராதம் செலுத்தினார். அவர் மீது எப்.ஐஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்ட்து

இந்நிலையில் தற்போது பாலம் அமைப்பதற்கான பூஜை ஒன்றில், தனிமனித இடைவெளியை மீறி தனது பாஜக கட்சிகாரர்களுடன் கூட்டமாக கலந்துகொண்டு, அபராஜிதா மீண்டும் சர்ச்சையை சிக்கியுள்ளார்.

Comments are closed.