காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பல்வேறு வல்லுநர்களோடு காணொலி மூலம் பேசி வருகிறார். அவர் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாராத்திற்காக நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி உள்ளிட்டோருடன் ஊரடங்கு உத்தரவு குறித்தும் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்தும் பேசியிருந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் ராகுல் காந்தி பஜாஜ் நிறுவனத்தின் இயக்குநர் ராஜிவ் பஜாஜுடன் கலந்துரையாடியுள்ளார். இந்த விவாதத்தின்போது பஜாஜ், பாஜக அரசு அமல் செய்த முழு முடக்க நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து பேசிய ராஜிவ் பஜாஜ், “நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் பாதிப்பு ஏற்பட்டன. முடக்க நடவடிக்கைகள் சரியாக இல்லாததால் கொரோனா வைஸை கட்டுப்படுத்த இயலவில்லை. ஊரடங்கு அமல் செய்ததில் பல ஓட்டைகள் இருந்தன.
பொருளாதாரமும் பெருமளவு பாதித்துள்ளது. இதனால் எந்த பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை. கொரோனா வைரஸைக் குறைக்கப் போடப்பட்ட இந்த முழு முடக்க உத்தரவு, இந்திய பொருளாரத்தை குலைத்துவிட்டது.
இந்தியாவில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு போன்று வேறு எந்த நாட்டிலும் அமல் செய்யப்படவில்லை என்று கருதுகிறேன்” இவ்வாறு ராஜிவ் பஜாஜ் பேசினார்.
ராகுல் காந்தி பேசுகையில், “முழு ஊரடங்கானது, பணக்காரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அவர்களுக்கு வீடு உள்ளது. மிக சொகுசான வாழ்க்கை உள்ளது. ஆனால் ஏழை மக்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இந்த நடவடிக்கை பெரும் துயரை ஏற்படுத்துள்ளது. இப்போது நாம் நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும். பொருளாதாரம் இல்லை என்றால், ஒன்றுமே இல்லை” இவ்வாறு என்று ராகுல் காந்தி பேசினார்.