இந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாஜக அரசு இந்தியா மக்களுக்கு சிறந்து விளங்குவதாக, உலக நாடுகள் கூறுவதாக தற்பெருமையுடன் மோடி தெரிவித்து வருகிறார். நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 14 ஆயிரத்து 476 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.

உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் எப்படி உலக அளவில் சிறந்து விளங்கும் நாடு என மோடியால் பெருமிதம் கொள்ளமுடிகிறது என அரசியல் நோக்கர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள்.

இந்நிலையில், அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் உலகளாவிய நிருபரும், எழுத்தாளருமான ராணா அயூப் இந்தியாவில் ஆய்வை மேற்கொண்டுள்ளார். ஆய்வின்படி கொரோனாவுக்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ள மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டர்கள் வசதியில்லாமல் நோயாளிகள் தவித்து வருவதும், அதன் காரணமாக உயிர்கள் பறிபோகின்றன. அதேபோல, கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா அறிகுறிகளுடன் வரும் மக்களுக்கு சோதனை மேற்கொள்ள கருவிகளே இல்லாத அவலநிலை உள்ளது. உத்தர பிரதேசத்தில் பெரும்பாலான கொரோனா அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு காசநோய்க்கான மருந்துகளை சான்றிதழ் பெறாத மருத்துவர்கள் கொடுத்து வருவதாகவும், அதனால் ஏராளமான மக்கள் உயிரிழப்பதாகவும் மருத்துவர் ஷகீல் கூறியதாக ராணா அயூப் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸை தொடக்கத்தில் சறியான நடவடிக்கைகளின்றி உலக வல்லரசு நாடான அமெரிக்காவும், பிரேசிலும் தற்போது லட்சக்கணக்கான கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்திய பிரதமரும் இணைந்துள்ளார். கொரோனா பரவல் மேலும் வலுவடைந்து வருவதால் இந்தியாவின் ஜனநாயகத்தை இருட்டடைய செய்து, 130 கோடி மக்களை எதிர்காலத்திற்கு நரேந்திர மோடி வழிநடத்துகிறார் என அந்த செய்தி குறிப்பில் ராணா அயூப் தெரிவித்துள்ளார்.

Comments are closed.