முதல் தடுப்பூசியை மோடி போட்டுக்கொண்டால் மக்களும் தயாராக இருப்பார்கள் -எதிர்கட்சிகள்

0

கொரோனா தடுப்பூசி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனவே, பிரதமர் நரேந்திர மோடி முதலில் தடுப்பூசி யை போட்டுக் கொள்ள வேண்டும் என ஆர்ஜேடி தலைவரான லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ்  தடுப்பூசி  இன்னும் சில தினங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில், முதல் தடுப்பபூசியை பிரதமர் மோடி போட்டுக்கொள்ள வேண்டும்  எனவும், அதன்பிறகு மக்கள் அதை போட்டுக்கொள்ள தயாராவார்கள் எனவும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜ் பிரதாப் கூறியுள்ளார். இவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மத்திய அரசு, இத் தடுப்பூசி பரிசோதனை முழுமை பெறாததற்கு முன்னரே இதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருகிறது எனவும். இது மக்களின் உயிருடன் விளையாடும் அபத்தான முடிவு என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளது.
அதில் பிரதமர் மோடி முதலில் கொரோன தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும், பிறகு அதை  மக்களாகிய நாங்கள் பயன்படுத்த தயாராக இருக்கிறோம் என தேஜ் பிரதாப் கூறியுள்ளார்.
முன்னதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ்  சிங்கும் பாஜக இந்த தடுப்பூசியை கொண்டு வந்திருக்கிறது. எனவே இதன் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் இதை நம்பவில்லை என்ற அவர், இது கொரோனா தடுப்பூசி அல்ல, இது பாஜக தடுப்பூசி என விமர்சித்துள்ளார்.

Comments are closed.