புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அலட்சியம் காட்டிய மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி

0

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்லும்போது சரக்கு ரயிலில் அடிப்பட்டு இறந்ததும், லாரிகளின் உள்ளே சென்று அமர்ந்து பயணித்ததும் ஊடகங்களில் பரவலாக பரவியது.

உயிர்களையும் வேலைகளையும் இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என நாடாளுமன்றத்தில் பாஜக அரசு அலட்சியமாக தெரிவித்தது குறித்து நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

மேலும், “இறந்த அல்லது வேலைகளை இழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த எந்த தகவலையும் பராமரிக்கவில்லை. இதுபோன்ற அறிக்கையை எப்படி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். நீங்கள் மாநில அரசுகளிடமிருந்து அந்த விவரங்களை பெற்றிருக்க வேண்டும்” என்று நீதிபதி கேள்வி கேட்டார்.

இந்த உத்தரவுக்கு பதிலளிக்க இரண்டு வாரகாலம் அவகாசம் வேண்டுமென கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் நேற்று அவகாசம் கோரினார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வருவதற்காக மாநில அரசு ரூ.146 கோடியை செலவிட்டதாக கூறியது தொடர்பாக வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செலவு விவரங்களை விளக்குமாறு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவை அனைத்தையும் விசாரித்த நீதிபதி வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Comments are closed.