புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்

0

ஊரடங்கு காரணத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் 46 நாட்களாக கடுமையாக சிக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படும் என்றும் பாஜக அரசு அறிவித்தது.

இந்த கட்டண நிர்ணயிப்பால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு இலவச பயண வசதி ஏற்படுத்தும் மோடி அரசுக்கு, ஊரடங்கால் வேலையின்றி, உணவில்லாமல் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற செயல் என விமர்சித்ததோடு, தொழிலாளர்களின் பயண செலவை காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் எனவும் அறிவித்தார்.

பின்னர், தொழிலாளர்களுக்கான பயண செலவில் 85% ரயில்வே அமைச்சகம் ஏற்கும் என மோடி அரசு தெரிவித்தது.

இந்நிலையில் குஜராத்தின் சூரத்தில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு செல்ல காத்துக்கிடந்த தொழிலாளர்களிடம் பாஜக கவுன்சிலரின் சகோதரர் ரூ.80 ஆயிரம் வசூலிததுள்ளார்.

உ.பி செல்ல தான் ஏற்பாடு செய்வதாகக் கூறி பா.ஜ.க கவுன்சிலர் அமித் ராஜ்புத்தின் சகோதரர் அமர், புலம்பெயர் தொழிலாளர்களர்கள் 80 பேரிடம் தலா ரூ.1,000 என 80 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளார்.

Comments are closed.