ஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா? -கே.சி. வேணுகோபால் கேள்வி

0

பாஜக அரசிடம் ஏழைகளுக்கு கொடுக்க பணமில்லை, ஆனால் ஆட்சி கவிழ்ப்பதற்கு பாஜக-விடம் பணம் உள்ளதா? என்று கர்நாடக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: “கொரோனா பெருந்தொற்றினால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் பலியாகின்றனர். நாட்டின் மருத்துவ உட்கட்டமைப்புகள் வீழ்ந்து வருகின்றன. கொரோனா பதற்றம் மக்களுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், மத்திய பாஜக அரசு, ஜனநாயக ரீதியாக தேர்வு செய்த அரசுகளை கலைப்பதிலேயே மும்முரம் காட்டி வருகிறது.

முதலில் கர்நாடகா, பின்னர் மத்திய பிரதேசம் தற்போது ராஜஸ்தான் என்று, பாஜகவினர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பதில் குறியாக உள்ளனர். ஏழைகளுக்குக் கொடுக்க மத்திய பாஜக அரசிடம் பணம் இல்லை. கொரோனா சுகாதார பணியாளர்களுக்கு தரமான பாதுகாப்பு கருவிகளை வழங்கவும் பணம் இல்லை. ஆனால் ஜனநாயகரீதியாக தேர்வு செய்த ஆட்சியைக் கவிழ்க்க மட்டும் பாஜக-விடம் ஏராளமாக பணம் உள்ளது. எங்கிருந்து வருகிறது இந்த பணம்? இவ்வாறு கே.சி. வேணுகோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.