உ.பி-யில் பசுவதைத் தடுப்புச் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராக உள்ளது -அலகாபாத் உயர்நீதிமன்றம்

0

உத்தர பிரதேசத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததிலிருந்து இந்துத்துவா கும்பல்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடும் கும்பல்களின் அராஜகம் அதிகரித்துள்ளது. 2018 ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் அக்லாக் என்ற முதியவர் ஒருவர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி பசு பாதுகாப்பு கும்பல் அவரை அடித்து கொலை செய்தது. இந்த சம்பத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது.

இவ்வாறு கண்டனங்கள் எழுந்தும் இந்துத்துவா கும்பலின் வன்முறை வெறியாட்டம் தொடர்ச்சியாக அறங்கேறி வருகிறது.

இந்த பசுவதை தடை சட்டத்தால் பாதிக்கப்பட்டு கைதான ரஹ்முத்தீன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார், அதற்கான விசாரணை குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையினர் சமர்ப்பித்த ஆதாரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கியதாக தெரிவித்துள்ளனர்.

அப்பாவி நபர்களுக்கு எதிராக இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது எனக்கூறிய நீதிபதிகள், இறைச்சி மீட்கப்படும்போது பகுப்பாய்வு செய்யப்படாமல் பொதுவாக மாட்டிறைச்சி என குறிப்பிடப்படுவதாகத் தெரிவித்தனர்.

Comments are closed.