கோமியத்தை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்த முடிவு- பாஜக அமைச்சர்

0

கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் சௌபே தெரிவித்துள்ளார்.

கோவை தனியார் மருத்துவணையில் அதிநவீன புற்றுநோய்க்கான சிகிச்சை கருவிகளை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே தொடங்கி வைத்து பேசுகையில், “பசுவின் கோமியத்தில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால், புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துப்பொருளாக அறிவிக்கப்படும். அதற்கான ஆய்வு தொடர்ந்து நடந்து வருவதாகவும், விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments are closed.