“இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லையா” -முகாமில் தஞ்சமடைந்த CRPF வீரர் வேதனை

0

நாட்டின் பாதுகாப்புக்காக, மத்திய ரிசர்வ் காவல்படையில், பணியாற்றிய எனக்கு, இந்திய நாட்டில் வாழ உரிமையில்லையா? என்று முன்னாள் சிஆர்பிஎப் வீரர் ஆயிஷ் முகம்மது கேள்வி எழுப்பியுள்ளார்.

CRPF என்று அழைக்கக்கூடிய மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி 2002-ஆம் ஆண்டில் தலைமை காவலராக ஓய்வு பெற்றவர் ஆயிஷ் முகம்மது. இவருக்கு வயது 58. நாட்டின் பாதுகாப்புக்காக பணியாற்றியவரான ஆயிஷ் முகம்மது, தற்போது தனக்கும், குடும்பத்திற்குமே பாதுகாப்பின்றி, டெல்லி முஸ்தபாபாத்திலுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தஞ்சம் அடைந்துள்ளார்.

டெல்லி பாகீரதி விஹார் அருகே ஆயிஷ் முகம்மதின் வீட்டிட்டை பிப்ரவரி 25ஆம் தேதி வன்முறையின்போது, இந்துத்துவா கும்பல்கள் எரித்து நாசமாக்கிவீட்டன. அதனால் ஆயிஷ் நிவாரண முகாமில் அடைக்கலம் பஅடைந்ந்தார். “இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லையா?” என வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார் ஆயிஷ்.“

அன்றைய தினம் வன்முறையாளர்கள் 200 முதல் 300 பேர் கலர்களை வீசீ, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். மேலும் வீட்டிற்கும் தீ வைத்தனர். அப்போது, என் மகனுடன் நானும் வீட்டிற்குள் இருந்தேன். வெளியே செல்ல முடியாமல் தவித்தபோது, மாடி வழியாக பக்கத்து வீட்டில் குதித்து நாங்கள் உயிர் தப்பினோம். மார்ச் 29 அன்று எனது சகோதரி மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்கி வைத்திருந்தோம். அந்த நகைகள் அனைத்தையும் வன்முறையாளர்கள் திருடிச்சென்று விட்டனர்.எனது இரு இருசக்கர வாகனங்களை எரித்ததுடன், வீட்டை முற்றிலும் எறித்து நாசம் செய்துவிட்டனர்.

1991இல் இருந்து மத்திய ரிசர்வ் காவல்படையில் பணியாற்றியுள்ளேன். காஷ்மீரிலும் பணியாற்றினேன். பணியின்போது நாட்டிற்காக பலமுறை படுகாயங்களையும் சந்தித்தவன் நான். ஆனால், என்மீது தற்போது நடத்தப்பட்ட தாக்குதல், “இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லை என்பதுபோல உள்ளது” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

இதுபோல பல முக்கிய அரசியல் தலைவர்களின் குடியிரிமையை பறிக்கும் மதவாத திட்டம்தான் CAA-NRC-NPR சட்டம். இதைதான் மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் இந்த CAA சட்டத்தை அமல்படுத்தமாடோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

Comments are closed.