கஸ்டடி கொலை: காவலர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

0

உத்திர பிரதேசம் ஹஜ்ரத் பூர் ஊரை சேர்ந்த சோனு என்கிற சோம்வீர். இவர் நில தரகரிடம் வேலை பார்க்கிறார். ஒருநாள் சோனுன் வீட்டில் இருக்கும்போது ஒருநபர் நிலம் காட்ட வேண்டி சோனுவை அழைத்துள்ளார். சோனுவும் நிலம் காட்ட அவருடன் சென்றுள்ளார்.  ஆனால் அந்த நபருடன் 5 போலிசாரும் வந்துள்ளனர். இவர் மீதுள்ள தனிப்பட்ட கோபத்தின் காரணமாக திட்டமிட்டு சப்-இன்ஸ்பெக்டர் ஹிந்த்வீர் சிங்க், மகேஷ் மிஸ்ரா மற்றும் கான்ஸ்டபிள் பிரதீப் குமார், புஷ்பேந்தர், ஹரிபால் சிங் ஆகிய 5 போலிஸார் ஒரு தனி நபரின் பேச்சை கேட்டு சோனுவை கைது செய்துள்ளனர்.

எவ்வித தவறும் செய்யாத இவரை 320/06 மற்றும் பிறிவு எண்-39 என்கிற குற்ற வழக்கில் கைது செய்து,  சாகும் வரை அடித்து சித்திரவதை செய்து அவரை தற்கொலை செய்ய வைத்துள்ளனர். இந்த சம்பவம் 2006ஆம் ஆண்டு நடைபெற்றது.

இதனையடுத்து சோனுவின் தந்தை, என் மகனை போலிஸார் சித்திரவதைப்படுத்தி கொன்றுவிட்டார்கள். ஆனால், அதற்கு போலிஸார் மறுப்பு தெரிவித்து, சோனு தற்கொலை செய்துக்கொண்டதாக மற்றி கூறுகின்றனர் என்று வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உபியில் உள்ள உச்ச நீதிமன்றத்ததிற்கு வருகிறது. இதற்கு பலியான சோனுவின் தந்தை  இந்த வழக்கு உபியில் உள்ள உச்சநீதிமன்றத்ததில் நடந்தால் சரிவர இருக்காது. ஆகையால் இந்த விசாரனையை டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றாப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட்டார்.சோனு தந்தை கேட்டுக்கொண்டதை அடுத்து உச்சநீதிமன்றம், இந்த வழக்கை டெல்லி நீதிமன்றத்தில் விசாரிக்க மாற்றி அமைத்தது.

அதன் பிறகு டெல்லி நீதிமன்றத்தில் இந்த விசாரனையை நடத்தியதில், இவ்வழக்கின் உண்மையை அறிந்து அந்த 5 போலிஸாரையும் கைது செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments are closed.