பாஜக ஒதுக்கியதால் அரசியலிலிருந்து ஓய்வு- தாமோதர் ரவுத்!

0

ஒடிசாவின் பாஜக மூத்த தலைவர் தாமோதர் ரவுத் புதன்கிழமை (நேற்று) பாஜக அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் வசந்த் பாண்டாவுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், “கட்சியின் நிகழ்ச்சிகளில், முடிவு எடுப்பதில், கொள்கை வகுப்பதில் தன்னுடைய ஆலோசனைகள் தேவையில்லை என்று கட்சி முடிவெடுத்த பிறகு எனக்கு என்ன வேலை இருக்கிறது.

எனது  ஆலோசனைகள் தேவைப்படவில்லை என்பதை உணர்ந்து வருத்தமடைந்தேன். என் மனநிலை ஆழமாய் காயமடைந்தது.

மாநில எம்.எல்.ஏ.வாக 35 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளேன், மாநில அமைச்சரவையில் 6 முறை இடம்பெற்றுள்ளேன். தற்போது கட்சியில் எனது முக்கியத்துவம் நாளுக்குநாள் குறைந்ததையடுத்து நான் அரசியலிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்தேன்” என்றார் ரவுத்.

இந்நிலையில் தாமோதர் ரவுத்தின் மகனும் பிஜேடி எம்.எல்.ஏ.வுமான சம்பிது ரவுத், “தன் தந்தை பாஜகவில் சேர முடிவெடுத்ததே தவறானது என்றார். நான் அவரை வேண்டாம் என்று தடுக்க முயன்றேன், ஆனால் அவர் கேட்கவில்லை” என்றார் மகன் சம்பித் ரவுத்.

Comments are closed.