டெல்லியில் போராடும் விவசாயிகளால் பறவை காய்ச்சல் பரவுகிறது -பாஜக எம்.எல்.ஏ கருத்தால் சர்ச்சை

0

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் மதன் திலாவர் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

‘மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு விவசாயிகள் டெல்லிக்கு ‘பிக்னிக்’ வந்துள்ளனர்’ என செய்தியளர்களிடம் அளித்த பேட்டியில் மதன் திலாவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர்களில் கொள்ளையர்கள், தீவிரவாதிகள் கூட கலந்திருக்கலாம்’ எனவும் தெரிவித்தார்.

‘டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பறவை காய்ச்சலை பரப்பும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர்’ என்று விமர்சித்த அவர், ‘இவர்கள் நாட்டை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர. இந்த விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால், நாடு முழுவதும் பறவை காய்ச்சல் பரவும்’ என்று மதன் எச்சரித்தார்.

கோழி இறைச்சியை உண்ணும் போது அதன் மூலம் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் பாஜக எம்எல்ஏ கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.