டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

0

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று டெல்லியில் விவசாயிகள் இணைந்து மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெத்தனர்.

இதற்காக சிங்கு எல்லையில் இருந்து டெல்லிக்குள் டிராக்டர்களுடன் விவசாயிகள் நுழைந்தால், அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

டிராக்டர் பெரணிக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments are closed.