“தனிமை சிறையில் கொடுமைப்படுத்தப்படுகிறேன்” -உமர் காலித் நீதிமன்றத்தில் உருக்கம்

0

டெல்லி திகார் சிறையில் தனிமையில் கொடுமைப்படுத்தப்படுவதாக ஜே.என்.யூ முன்னாள் மாணவர் ஒமர் காலித் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் சி.ஏ.ஏ.வுக்கு (குடியுரிமை திருத்த சட்டம்) எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகள் போராட்டக்காரர்களை தாக்கி வன்முறையாக மாற்றினர்.

இந்த வன்முறைகளில் 54 பேர் கொல்லப்பட்டனர். 600 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 97 போராட்டக்கரர்களுக்கு துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருந்தன.

வன்முறைகள் தொடர்பான வழக்கில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யூ.) முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித், UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் நீதிபதியிடம் கூறியதாவது, தான் லாக்கப் விட்டு வெளியே செல்லவோ யாருடனும் பேசவோ, பாரக்கவோ அனுமதிக்கப்படவில்லை. தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இதனால் மன மற்றும் உடல் ரீதியில் அவதிப்படுவதாக உமர் காலித் நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, சிறை கண்காணிப்பாளரை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் உமர் காலித்தின் நீதிமன்ற காவலை மேலும் 30 நாட்களுக்கு நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.