டெல்லி வன்முறை: 2000-க்கும் மேற்பட்டோர் கைது

0

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது, பாஜக-ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்தினர்.

இந்த வன்முறையில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் சேதமடைந்த சொத்துக்கள் குறித்து, முதலாவது, இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “டெல்லி வன்முறையில் 122 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 322 கடைகள் தீ வைத்தும், அடித்து நொறுக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 301 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன”என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வன்முறை குறித்து  டெல்லி காவல்துறை நேற்று தெரிவித்ததாவது:  ‘டெல்லி கலவரம் தொடா்பாக இதுவரை 702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 49 வழக்குகள் ஆயுதத்தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடா்பாக இதுவரை 2,387 பேரை கைது செய்தும், தடுப்பு காவலில் வைத்தும் விசாரிக்கப்பட்டுள்ளனா். அமன் குழுக்களுடன் 283 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன” என்றது காவல்துறை.

Comments are closed.