டெல்லி செங்கோட்டையில் கம்பீரமாக விவசாயக்கொடியை ஏற்றிய விவசாயிகள்

0

மத்திய பாஜக அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 62வது நாளான இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர்.

டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் பல விவசாயிகள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது. டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது தலைநகர் டெல்லி செங்கோட்டைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் செங்கோட்டையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகள் விவசாயக்கொடியை ஏற்றினர்.

நாடு முழுவதும் இன்று 72வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பாஜக அரசு காவல்துறையை ஏவிவிட்டு விவசாயிகள் மீது தாக்குதலலை நடத்தியுள்ளயது.

Comments are closed.