டெல்லி கலவரம்: 750 வழக்குகளுடன் 17 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

0

பாஜகவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜனநாயக முறையில் கடந்த பிப்ரவரி மாதம் அமைதியாக மாபெரும் தொடர் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பாஜகவின் கபில் மிஷ்ரா தலைமையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் விதத்தில் போராட்டம் நடந்தது. கபில் மிஷ்ரா தலைமையில் நடைபெற்ற பாஜகவினரது போராட்டம் கலவரமாக மாற்றி அப்பாவி மக்களை தாக்கத்தொடங்கினர். அதில் 53 பேர் கொல்லப்பட்டனர். 583 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கலவரத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் சொத்துக்களும், அரசுக்கு சொந்தமான சொத்துக்களும் சேதமாகியது.

இந்த கலவரம் தொடர்பாக டெல்லியில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் சுமார் 750 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி காவல்நிலைய சிறப்புப் பிரிவு போலீசார் கலவரம் தொடர்பாக டெல்லியில் உள்ள கார்கர்டோமா நீதிமன்றத்தில் நேற்று 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த குற்றப்பத்திரிகையில் 15 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது. கொலை, தேசத்துரோகம், வன்முறையை தூண்டுதல், கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Comments are closed.