டெல்லி கலவரத்திற்கு ஆதரவளித்த ஃபேஸ்புக்: நிறுவன இயக்குநர் மீது நடவடிக்கை இல்லை – உச்சநீதிமன்றம்

0

வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன் மீது அக்டோபர் 15 வரை கட்டாய நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று டெல்லி சட்டப்பேரவைக குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

CAA சட்டத்திற்கு எதிராக ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது வடகிழக்கு டெல்லியில் கலவரத்தை தூண்டும் வகையில் இந்துத்துவ பயங்கரவாதிகள் சிலர் முகநூலில் வெளியிட்ட பதிவுகளை அந்நிறுவனம் நீக்கவில்லை என்றும், அதனால் அந்த கலவரத்தை முகநூல் நிறுவனம் நடந்துகொண்டதாகவும் குற்றடச்சாடு எழுத்தது. அதுதொடர்பாக டெல்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்க குழு கடந்த சில தினங்களாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு முகநூல் நிறுவனத்தின் இந்தியாவுக்கான துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜித் மோகனுக்கு டெல்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்க குழு செப்டம்பர் 10 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் அழைப்பு விடுத்திருந்தது.

இதை எதிர்த்து அஜித் மோகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை (நேற்று) விசாரணைக்கு வந்தது. 

மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி சட்டப்பேரவை செயலர், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், உள்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, மக்களவை மற்றும் மாநிலங்களவை, டெல்லி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும், அழைப்பாணை தொடர்பாக அஜித் மோகன் மீது வருகிற அக்டோபர் 15ஆம் தேதி வரை டெல்லி சட்டப்பேரவைக் குழு கட்டாய நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments are closed.