டெல்லி வன்முறை: இந்துத்துவ தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஈரான் வலியுறுத்தல்

0

டெல்லி சம்பவத்தில், இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட வன்முறை என்று ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷரீப் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில் “இந்தியர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த, புத்தியில்லாத குண்டர்களை மேலோங்க விட வேண்டாம்” என்று இந்திய அதிகாரிகளை கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஈரான் அமைச்சரின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்த, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவிற்கான ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டது.

 

இந்நிலையில், ஈரான் நாட்டின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு  விவகாரங்களை கவனித்து வருபவருமான ருஹுல்லாஹ் கமேனியும், டெல்லி வன்முறை குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இந்தியாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதால் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் இதயங்கள் துக்கத்தில் உள்ளது.  இஸ்லாமிய உலகில் இருந்து இந்தியா தனிமைப்படுத்தப்படுவதை தடுக்க இந்திய அரசு தீவிரவாத இந்துக்களையும் அவர்களது கட்சிகளையும் எதிர்கொள்ள வேண்டும் மற்றும் முஸ்லிம்களின் படுகொலைகளை நிறுத்த வேண்டும்” என்று ரஹுல்லா கமேனி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.