டெல்லி வன்முறைக்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் -மம்தா பானா்ஜி

0

டெல்லியில் இந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய வன்முறைக்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது, பாஜக-ஆர்.எஸ்.எஸ்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவங்களில் 50க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் மம்தா பேசியதாவது:

“டெல்லியில் மக்கள் கொல்லப்பட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது. இது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. அரசின் ஆதரவுடன் டெல்லியில் வன்முறை நிகழ்ந்துள்ளது. ஆனால் அதை கலவரம் என்றுவிட்டனர். டெல்லி போலீஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சிஆா்பிஎஃப், சிஐஎஸ்எஃப் உள்ளிட்ட மத்திய காவல் படையினா் இருந்தும், யாரும் வன்முறையை கட்டுப்படுத்தவில்லை.

CAA சட்டத்தால் இந்த வன்முறையில் பலா் கொல்லப்பட்டனா். அமித் ஷா, இச்சம்பவங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தை போன்று இந்தியா முழுவதும் கலவரங்களை தூண்டிவிட பாஜக முயற்சிக்கிறது. இந்த வன்முறைக்கு பாஜக கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மம்தா தெரிவித்துள்ளார்.

Comments are closed.