டெல்லி கலவர வழக்கு: குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மீது குற்றாச்சாட்டு

0

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரம் தொடர்பான குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், மூத்த வழக்‍கறிஞர் பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

டெல்லியின்  பல பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் தொடர் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பாஜகவின் கபில் மிஷ்ரா,  சி.ஏ.ஏ எதிராக ஜனநாயக முறையில் போராடிய மக்கள் மீது வன்முறை தூண்டும் விதத்தில் அவர் ஒரு போராட்டத்தை நடத்தினார். கபில் மிஷ்ரா தலைமையில் நடைபெற்ற பாஜகவினரின் இந்த போராட்டம் கலவரமாக மாறி அப்பாவி மக்களை மீது தாக்குதல் நடத்தினர். அதில் 53 பேர் கொல்லப்பட்டனர். 583 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்‍குப்பதிவு செய்த டெல்லி போலீஸார், சுமார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்‍கையை டெல்லி நீதிமன்றத்தில் தாக்‍கல் செய்தனர். இவ்வழக்‍கில், ஆம் ஆத்மி கவுன்சிலர்தாஹிர் உசேன், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்‍கைக்‍கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், டெல்லி கலவர வழக்‍கில், காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. சல்மான் குர்ஷித், மூத்த வழக்‍கறிஞர் திரு. பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகை சேர்க்‍கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சுவராஜ் அப்யான் தலைவர் யோகேந்திர யாதவ், பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும் சமூக ஆர்வலருமான அபூர்வானந்த் மற்றும் ஆவணப்படங்கள் தயாரிப்பாளர் ராஹுல் ராய் ஆகியோரது பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.