தனிமை சிறையில் கொடுமைக்குள்ளாகும் உமர் காலிதுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

0

மத்திய பாஜக அரசின் சி.ஏ.ஏ.வுக்கு (குடியுரிமை திருத்த சட்டம்) எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகள் போராட்டக்காரர்களை தாக்கி வன்முறையாக மாற்றினர்.

இந்த வன்முறைகளில் 54 பேர் கொல்லப்பட்டனர். 600 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 97 போராட்டக்கரர்களுக்கு துப்பாக்கிச்சூட்டு காயங்கள் இருந்தன.

இந்நிலையில், ஜே.என்,யு முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் மாணவர் ஷர்ஜீல் இமாம் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் நீதிமன்றத்தில் உமர் காலித் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் நீதிபதியிடம் கூறியதாவது, “தான் லாக்கப் விட்டு வெளியே செல்லவோ யாருடனும் பேசவோ, பாரக்கவோ அனுமதிக்கப்படவில்லை. தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இதனால் மன மற்றும் உடல் ரீதியில் அவதிப்படுகிறேன்” என கூறினார்.

இந்நிலையில் புதன்கிழமை (நேற்று)  இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது டெல்லி நீதிமன்றம் முன்னாள் ஜே.என்.யூ மாணவரான உமர் காலித்தின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 16 வரை நீட்டித்து உத்தரவிட்டது.

Comments are closed.