டெல்லி காவல்துறை உதவியோடு ஆர்.எஸ்.எஸ். கும்பல் திட்டமிட்டு நடத்திய கலவரம்: உயிரிழப்பு 34 ஆக உயர்வு

0

வட கிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறையின் உதவியோடு ஆர்.எஸ்.எஸ். கும்பல் திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. 70 நாட்களுக்கு மேலாக தொடரும் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. இந்நிலையில் தான் சனிக்கிழமை இரவு வடகிழக்கு டெல்லியில் ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 500க்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை சீர்குலைக்க திட்டமிட்ட வகையில் ஜாஃப்ராபாத் அருகில் உள்ள மெளஜ்பூா் பகுதியில் சிஏஏ ஆதரவுப் போராட்டம் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை ஒன்று திரண்டனர்.

அப்போது, அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் உதவியோடு கற்களை வீசி தாக்குலில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் திங்கள்கிழமையும் வன்முறை ஏற்பட்டது. இது ஜாஃப்ராபாத், மெளஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் ஆகிய பகுதிகளுக்கு பரவியது. அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள தொழுகை நடத்தும் பள்ளிவாசல் கோபுரத்தின் (மினரா) மீது ஏறிய கும்பல் ஒலிப்பெருக்கி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொருக்கி, காவிக் கொடிகளை ஏற்றினர். அங்குள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களை அடையாளமிட்டு தீயிட்டு கொழுத்தி உள்ளனர். கிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை இரவுக்குப் பிறகு சந்த் பாக், பஜன்புரா, கோகுல்புரி, மெளஜ்பூர், கர்டாம்புரி, ஜாஃப்ராபாத் உள்ளிட்ட இடங்களில் தெருக்களில் ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் வன்முறையை நிகழ்த்தினர். மேலே குறிப்பிட்ட இக்காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

கடந்த நான்கு நாள்களாக நீடித்து வந்த இந்த வன்முறை புதன்கிழமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வன்முறைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.

Comments are closed.