டெல்லி ஷாஹின் பாக் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: இந்துத்துவ தீவிரவாதிகள் அத்துமீறல்

0

குடியுரிமை சட்டத்திற்கு (CAA, NPR, NRC) எதிராக டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் தொங்கிய போராட்டம் இன்று வரை தொடர்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டி நாடு முழுவதும் நடைபெற்று வந்த ஷாஹின் பாக் வடிவிலான போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், டெல்லி ஷாஹின் பாக் போராட்டக் குழு, கொரோனா வைரஸை எதிர் கொள்ளும் வகையில் போராட்ட வழிமுறையை மாற்றி போராடி வருகின்றனர். சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் இந்த போராட்டம் தொடர்கிறது.

அதே நேரத்தில் சுய ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு, போராட்டத்தின் வடிவத்தை மாற்றி, ஒரு மீட்டர் இடைவேளி விட்டு ஒவ்வொரு டெண்டுகள் அமைத்து ஒரு டெண்ட்டுக்கு தலா 2 பெண்கள் வீதம் அமர்ந்து அகிம்சை வழியில் போராடி வருவதாக ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

https://twitter.com/ANI/status/1241585816947679232

 

பெண்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில், டெல்லி ஷாஹின் பாக் பகுதிக்கு அருகே இந்துத்துவ தீவிரவாதிகள் பெட்ரோல் குண்டு வீசி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
எந்தவித சேதமும் இன்றி அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர்.

ஏற்கெனவே வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை பிப்ரவரி 23 அன்று வன்முறை வெறியாட்டத்தின் மூலம் இந்துத்துவ தீவிரவாதிகள் சீர்குலைத்தனர். அதில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் நடைபெற்ற ஷாஹின் பாக் வடிவிலான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக வெறுப்பு பேச்சுகளை பாஜக தலைவர்கள் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Comments are closed.