டெல்லியில் மதர்ஸா ஆசிரியர் முஹம்மது உவைஸ் அடித்துக் கொலை!

0

டெல்லியில் ஹெட்ஃபோன் வாங்க சென்ற மதர்ஸா ஆசிரியரை இரண்டு வியாபாரிகள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

வடக்கு டெல்லியில் ஒரு மொபைல் கடையில் இரண்டு நாட்களுக்கு முன் ஹெட்ஃபோன் வாங்க மதர்ஸா ஆசிரியர் முஹம்மது உவைஸ் சென்றுளார். அப்போது விலையில் முன்பின் இருந்ததாகவும் விலை அதிகமாக இருப்பதாக வாக்குவாததம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு வியாபாரிகள் அவரை கடுமையாக தாக்கியதை அடுத்து முஹம்மது உவைஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து போலிசார் அவரின் வீட்டிற்கு தகவல் கொடுத்து பிரேத பரிசோதனை செய்த பிறகு உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

முகமது ஓவைஷ் குடும்பத்தினர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  மேலும் கொலை காரணம் குறித்தும் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

Comments are closed.